Friday 18 January 2013

திருமணத்திற்கு பிறகு பெண்ணின் வாழ்விடம் எது?


அளவற்ற அருளாளனும் நிகரற்ற பேரன்புடயோனுமாகிய எல்லாம் வல்ல
அல்லாஹ்வின் திருப்பெயரால்.........

திருமணத்திற்கு பிறகு பெண் இருக்க வேண்டிய இடம்..? 

கேள்வி: திருமணத்திற்குப் பிறகு பெண், கணவன் வீட்டில் போய் வாழ
வேண்டுமா? அல்லது கணவன், மனைவியின் வீட்டில் போய் வாழ வேண்டுமா? இது குறித்து மார்க்கம் என்ன கூறுகின்றது?


பதில்: சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். 
(அல்குர்ஆன் 4:34)

ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள் என்றும் ஆண்களே பெண்களுக்காக பொருள் செலவு செய்ய வேண்டும் என்றும் இந்த வசனம் கூறுகின்றது. இந்த அடிப்படையில் மனைவிக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் அனைத்தும் கணவன் தான் கொடுத்தாக வேண்டும்.

உங்கள் வசதிக்கேற்ப அவர்களை நீங்கள் குடியிருக்கும் இடத்தில் குடியமர்த்துங்கள்! அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி அவர்களுக்குத் தீங்கு செய்யாதீர்கள்! அவர்கள் கர்ப்பிணிகளாக இருந்தால் அவர்கள் பிரசவிக்கும் வரை அவர்களுக்காகச் செலவிடுங்கள்! 
(அல்குர்ஆன் 65:6)

இந்த வசனத்தில் தலாக் விடப்பட்ட பெண்களுக்கு, அவர்கள் கர்ப்பிணிகளாக இருந்தால் பிரசவிக்கும் வரை கணவன் செய்ய வேண்டிய கடமையைப் பற்றி அல்லாஹ் சொல்-க் காட்டுகின்றான். இதில் கணவன் தான் மனைவிக்கு இருப்பிடத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று இறைவன் கட்டளையிடுகின்றான். தலாக் விடப்பட்ட பெண்களுக்கே கணவன் தான் இருப்பிடம் அமைத்துக் கொடுக்க வேண்டும் எனும் போது, சேர்ந்து வாழும் போது சொல்ல வேண்டியதே இல்லை. கண்டிப்பாக கணவனின் வீட்டில் தான் மனைவி இருக்க வேண்டுமே தவிர, மனைவியின் வீட்டில் கணவன் போய் இருப்பது குர்ஆனின் கட்டளைக்கு மாற்றமானது.
வரதட்சணை வாங்கவில்லை என்று கூறிக் கொண்டு, பெண்ணிடமிருந்து வீடு வாங்கும் வழக்கம் ஏகத்துவவாதிகள் என்று தங்களைக் கூறிக் கொள்ளும் சிலரிடம் கூட உள்ளது. குறிப்பாக 
அதிராம்பட்டினம் காயல்பட்டிணம், கீழக்கரை போன்ற பகுதிகளில் மாப்பிள்ளைக்கு வீடு கொடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாகவே உள்ளது.

ஆண்கள் செலவு செய்வதால் தான் பெண்களை நிர்வாகம் செய்யக் கூடிய தகுதி ஆண்களுக்கு உள்ளது என்று அல்லாஹ் கூறுகின்றான். அதற்கு மாற்றமாக பெண் வீட்டில் போய் ஆண் இருக்கும் போது, இயற்கையாகவே ஆண்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள அந்த நிர்வாகத் திறன் இல்லாமல் போய் அங்கு ஆண்கள் அடிமைகளாக நடத்தப்படுவதையும் நாம் பார்க்க முடிகின்றது. எனவே அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக பெண் வீட்டில் போய் கணவன் தங்கும் நிலை முற்றிலும் மாற வேண்டும். வரதட்சணை திருமணங்களைப் புறக்கணிப்பது போல், இது போன்று பெண்ணிடமிருந்து வீடு வாங்கி நடத்தப்படும் திருமணங்களையும் ஏகத்துவவாதிகள் புறக்கணிக்க வேண்டும்.

மேலும் வளரும்.... இன்ஷா அல்லாஹ்

4 comments:

  1. ஆணிருக்கும் வீடு அவனுக்கே சொந்தமில்லை என்ற போது, அவன் எப்படி அந்த வீட்டுக்கு அழைத்து வர முடியும், அந்த ஆண் தனியாக வாடகை வீட்டில் குறிப்பிட்ட காலம்(சொந்த வீடு கட்டும் வரை)அப்பென்னை தங்க வைக்கலாமே.(இப்படி செய்தால் மாமியா, நாத்தனார் கொடுமையிலிருந்து விடுபடலாம், அப்பெண்ணும் சுதந்திரமாக வாழ்வாள்)

    ReplyDelete
    Replies
    1. http://www.youtube.com/watch?v=hn1DFibiW38

      Delete
  2. நம்ம ஊரில் நடக்கும் இந்த கலாச்சாரம் சரிதானா....?
    இதில் ஒன்றும் பெரிய தவறில்லை என்று நீங்கள் நினைத்தீர்களாயின் ,இந்த வீடியோவை நீங்கள் பார்க்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்...தயவு செய்து அல்லாஹ்க்காக ஒரு மனி நேரம் செலவிட்டு அதை பாருங்கல்..... ஏனென்றால் நீங்கள் தான் இதை அதிகமான மக்களுக்கு எடுத்து செல்லலாம்...அதிரை express/.////thanks for advance to publish this video..http://srilankamoors.com/Media-centre/Veedum-sheetham-ahumaa.html

    ReplyDelete
  3. இளைஞர்கள் மத்தியில் வரதட்சனையை பற்றி விழிப்புனர்வு ஏற்படுத்த அந்த இளைஞ்சர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த இனைய தளத்தின் மூலியமாக இன்றைய இளைஞர்களும் அவர்களின் பெற்றோர்களும் வரதட்சனை என்ற பேயை அதிராம்பட்டினத்தைவிட்டும் விரட்டி அடிக்கும் வகையில் உங்கள் ஆக்கங்களும் கலந்துரையாடல்களும் பட்டிமன்றங்களும் இதில் இடம்பெற்று அதைக்கொண்டு மக்களிடம் நல்ல மாற்றம் ஏற்பட வல்ல ரஹ்மானிடம் துஆச்செய்தவனாக இந்த இனையத்ளத்திற்கு வித்திட்ட இளைஞ்சரையும் வழ்த்துகின்றேன்

    ReplyDelete